துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: வரும் 26ம் தேதி நேர்காணல் தொடங்கும்

சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை நேற்று இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வெளியிட்டது.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியது:
குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதில் 198 பேர் நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்த 76க்கும் மேற்பட்ட மாணவர்கள் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேர்முக தேர்வு பயிற்சி சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இலவசமாக நடைபெற உள்ளது.

நேர்முக தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள் கொண்ட வல்லுனர் குழு மாதிரி நேர்முக தேர்வினையும், வழிகாட்டு கருத்தரங்கையும் நடத்துகிறது. இதில் பங்குபெற மாணவர்கள் 044-43533445, 044-45543082 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல் வரும் 26ம் தேதி முதல் 28வரை சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

தேர்வர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு சுகாதார சார்நிலை பணியில் அடங்கிய மக்கள் திரள் பேட்டியாளர் மற்றும் தமிழ்நாடு சார்நிலை பணியில் அடங்கிய சமூக இயல் வல்லுநர் பதவிக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், சரிபார்ப்புக்கு பின்னர் சில சான்றிதழ்கள் முழுமையாக, சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்கள் வருகிற 21ம் தேதி இரவு 11.59 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

The post துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 மெயின் தேர்வு ரிசல்ட் வெளியீடு: வரும் 26ம் தேதி நேர்காணல் தொடங்கும் appeared first on Dinakaran.

Related Stories: