நீங்கள் நலமா- புதுமைத்திட்டம் மூலம் பயனாளிகளிடம் அமைச்சர்கள் தொலைபேசியில் கருத்து கேட்பு

சென்ைன: முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசின் திட்டப்பயன்கள் அனைத்தும் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் நேற்று ‘நீங்கள் நலமா’ என்ற சிறப்பு திட்டத்தை துவக்கிவைத்து, பயனாளிகளிடம் கருத்து கேட்டறிந்தார்.

அமைச்சர் பெரியகருப்பன்: கூட்டுறவு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் பயன்பெற்ற சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளை கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.

அமைச்சர் கே.என்.நேரு: சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு: சென்னை, அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் ‘‘நீங்கள் நலமா’’ திட்டத்தின் கீழ் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்னகம், மின் நுகர்வோர் சேவை மையம் வாயிலாக பயனாளிகளை தொடர்பு கொண்டு, கருத்துக்களை கேட்டறிந்தார்.

அமைச்சர் சக்கரபாணி: உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பொதுவிநியோகத் திட்டம், பகுதிநேர நியாயவிலைக் கடை, ராகி மற்றும் நெல் கொள்முதல் குறித்து திருவாரூர், கடலூர், திருச்சி, ஈரோடு, தென்காசி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 8 பேர்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார். அரிசி மிகவும் தரமாகவும், வழங்கப்படும் பொருள்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. கடை தற்போது அருகில் உள்ளதால் வசதியாக இருப்பதாகவும் திருச்சி மாவட்டம் தென்னூரைச் சேர்ந்த இளவரசி கூறினார்.

The post நீங்கள் நலமா- புதுமைத்திட்டம் மூலம் பயனாளிகளிடம் அமைச்சர்கள் தொலைபேசியில் கருத்து கேட்பு appeared first on Dinakaran.

Related Stories: