மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ₹52 லட்சம் காசோலை

சென்னை: மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸின் சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி சென்னை தி.நகர் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் கிளையின் சார்பில் தி.நகர் சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தி.நகர் தொகுதி எம்எல்ஏ கருணாநிதி கலந்துகொண்டு அரசு பள்ளி மாணவிகளின் நலனிற்காகவும், கல்வி, வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காக சென்னை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 40 பள்ளிகளை சேர்ந்த 585 மாணவிகளுக்கு சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) மலபார் குழுமம் சார்பில் மொத்தம் சுமார் ரூ.52 லட்சம் மதிப்பிலான காசோலையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, தி.நகர் துணை கிளை தலைவர் ரத்தீஷ், அண்ணா நகர் இணை கிளை தலைவர் சமீர், போரூர் இணை கிளை தலைவர் சுஹைல் மற்றும் கிளை ஊழியர்கள் பங்கேற்றனர்.மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள் இதர காரணமாகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்வது குறிப்பிடத்தக்கது.

The post மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் அரசு பள்ளி மாணவர்களுக்கு ₹52 லட்சம் காசோலை appeared first on Dinakaran.

Related Stories: