வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு

சென்னை: சிவராத்திரி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி விழா வரும் வெள்ளி (மார்ச் 8ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரசித்தி பெற்ற சிவ தலங்களுக்கு செல்ல ஏதுவாகவும் வார இறுதி நாள் என்பதாலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, சேலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு வரும் 7ம் தேதி 270 பேருந்துகளும், 8ம் தேதி 390 பேருந்துகளும், 9ம் தேதி 430 பேருந்துகளும் இயக்கம்

10ம் தேதி பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகள் //tnstc.in மற்றும் மொபைல் செயலி வழியே முன்பதிவு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு 770 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: