தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : அமைச்சர் ரகுபதி தாக்கு!!

நாகர்கோவில் : போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள குஜராத்தில் முதலில் போதைப்பொருளை பாஜக தடுக்கட்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “போதைப்பொருள் கடத்தல், விற்பனையை தடுக்க முதல்வர் உத்தரவின் பேரில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குஜராத்தில்தான் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என்பதுதான் நாடறிந்த உண்மை. தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்டது பாஜகதான். தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறோம்.கஞ்சா பயிரிடப்படாத மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.

போதைப்பொருள் வழக்குகளில் 80%-க்கும் மேல் தண்டனை பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு அரசு. போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய 16 பேரை கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது பாஜக. போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ள குஜராத்தில் முதலில் போதைப்பொருளை பாஜக தடுக்கட்டும். தேர்தலின்போது எய்ம்ஸ் வரும், தேர்தல் முடிந்தபிறகு எய்ம்ஸ் போய்விடும். தேர்தலுக்காகவே எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. குற்றப் பின்னணி உள்ளவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. குட்கா வழக்கில் சிக்கிய விஜயபாஸ்கர், போதைப்பொருள் பற்றி பேசுவது விந்தையாக உள்ளது. ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சேர்க்கப்பட்டுள்ளார்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தேர்தலுக்காக தமிழ்நாடு அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் : அமைச்சர் ரகுபதி தாக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: