இமாச்சலில் கடும் பனிப்பொழிவு 5 தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்

சிம்லா: இமாச்சலில் கடும் பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 650க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டது. இமயமலை தொடரின் அடிவாரத்தில் உள்ள இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு பொழிந்து வருகிறது. அதனுடன் மழையும் சேர்ந்து பொழிந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 60 செ.மீ மேல் பனி பொழிந்து உள்ளது. இதனால் சாலைகள், மரங்கள் மற்றும் வீடுகளில் பனியானது படர்ந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடைவிடாத மழை மற்றும் பனியால் பல இடங்களில் பனிச்சரிவுகள் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 650க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வாகனங்கள் மிக நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து காத்திருப்பதை காணமுடிகிறது. மேலும் இந்த கடும் பனிபொழிவால் , இமாச்சல் பிரதேச மாநிலத்தில், சுற்றுலா பயணிகளின் வருகையானது குறைந்துள்ளது. மேலும் சில இடங்களில் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின. இந்த பனிப் பொழிவானது, இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் என கூறப்படுகிறது.

 

The post இமாச்சலில் கடும் பனிப்பொழிவு 5 தேசிய நெடுஞ்சாலைகள் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: