குன்றத்து முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.24 லட்சம்

திருப்பரங்குன்றம், மார்ச் 5: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த மாத உண்டியல் காணிக்கை ரூ.24 லட்சமாக இருந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் கணக்கிடப்படுவது வழக்கம்.

இதன்படி கடந்த பிப்.8 முதல் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் துணை ஆணையர் சுரேஷ், கள்ளழகர் கோயில் துணை ஆணையர் கலைவாணன், அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இதில் கண்காணிப்பாளர்கள் சுமதி, சத்யசீலன், ஆய்வர் இளவரசி உள்ளிட்ட அலுவலர்கள், கோயில் ஊழியர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பணிகளின் முடிவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.23 லட்சத்து 92 ஆயிரத்து 60 மற்றும் 102 கிராம் தங்கம், 1 கிலோ 982 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post குன்றத்து முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.24 லட்சம் appeared first on Dinakaran.

Related Stories: