திருவொற்றியூர் 4 மற்றும் 7வது வார்டில் ரூ.2 கோடியில் சமூக நலக்கூடம் பல்நோக்கு கட்டிட பணிகள்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் 4 மற்றும் 7வது வார்டில், ரூ.2 கோடியில் சமூக நலக்கூடம் மற்றும் பல்நோக்கு கட்டிட பணிகளை எம்பி மற்றும் எம்எல்ஏ தொடங்கி வைத்தனர். திருவொற்றியூர் 4வது வார்டுக்கு உட்பட்ட ராமநாதபுரம் 1வது தெருவில் மாநகராட்சி இடத்தில் சமூக நலக்கூடம் கட்டித் தர வேண்டும் என வார்டு கவுன்சிலர் ஜெயராமன், மண்டல குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

அதன்பேரில் மாநகராட்சி பொது நிதி மற்றும் சிபிசிஎல் நிறுவன சிஎஸ்ஆர் நிதி ஆகியவற்றின் மூலம் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட கார்கில் நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம் என ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது.

இதற்கான பணிகள் தொடக்க விழா, மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், கவுன்சிலர் ஜெயராமன், மேற்கு பகுதி திமுக செயலாளர் வை.ம.அருள்தாசன், மண்டல அலுவலர் நவேந்திரன், திமுக நிர்வாகிகள் எம்.வி.குமார், ஆர்.எஸ்.சம்பத்,குமரேசன், கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post திருவொற்றியூர் 4 மற்றும் 7வது வார்டில் ரூ.2 கோடியில் சமூக நலக்கூடம் பல்நோக்கு கட்டிட பணிகள்: எம்பி, எம்எல்ஏ தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: