ஐ.சி.சி.யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளம் வீரர்!

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர், நியூசிலாந்தின் முன்னணி வீரர் மற்றும் இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்து வரும் இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான வில்லியம்சன் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசாங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் யு.ஏ.இ. வீராங்கனைகளான கவிஷா எகொடகே, ஈஷா ஓசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

 

The post ஐ.சி.சி.யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற இந்திய இளம் வீரர்! appeared first on Dinakaran.

Related Stories: