வீரர்கள் ஐபிஎல்லை விட சர்வதேச, உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவது அவர்களின் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார்

மும்பை: வீரர்கள் தங்கள் முன்னுரிமைகளை சரியாக அமைத்து, சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது அவர்களின் பட்டியலில் ஐபிஎல்லை விட எப்போதும் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில், குறிப்பாக ஒவ்வொரு புதிய ஐபிஎல் சீசன் நெருங்கும் போதும் ஐபிஎல்லில் அதிக ஆர்வம் காட்டும் வீரர்களின் போக்கு, நிபுணர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமிருந்து அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த விமர்சகர்களின் குழுவில் முன்னாள் இந்திய ஸ்விங் பவுலர் பிரவீன் குமாரும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களுடனான 2023-2024 ஆண்டுக்கான வருடாந்திர ஒப்பந்தப்பட்டியலில் இருந்து இஷான் கிஷான், ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டதை குறிப்பிட்டு காட்டியிருந்த பிசிசிஐ, தேசிய அணிகளில் பங்கேற்று விளையாட முடியாத போது வீரர்கள் நிச்சயம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற பரிந்துரையையும் சுட்டிக்காட்டியது. இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ரஞ்சிப்போட்டிகளை புறக்கணித்த நிலையில், பிசிசிஐ இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் வீரர்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது முக்கியம் என முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். “சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது அவர்களின் பட்டியலில் ஐபிஎல்லை விட எப்போதும் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணம் சம்பாதி, உன்னை யார் தடுப்பது? ஆனால் நீங்கள் நாட்டுக்காகவோ உள்நாட்டு கிரிக்கெட்டுக்காகவோ விளையாடாதது போல் இருக்கக்கூடாது. பணம் முக்கியம், ஆனால் இது தவறு” என தெரிவித்துள்ளார்.

The post வீரர்கள் ஐபிஎல்லை விட சர்வதேச, உள்நாட்டு போட்டிகளில் விளையாடுவது அவர்களின் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: முன்னாள் இந்திய வீரர் பிரவீன் குமார் appeared first on Dinakaran.

Related Stories: