சிஎஸ்கே வீரர் டெவோன் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல்!

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டெவோன் கான்வேக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைய 8 வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது பீல்டிங் செய்யும் போது கான்வேயின் இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக சீசனின் முதல் பாதியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிகிச்சையிலிருந்து அவர் குணமடைய 8 வாரங்கள் ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் 2024க்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேக்கு இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

5 முறை கோப்பையை வென்ற அணியான சிஎஸ்கே மார்ச் 22 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சேணிய அணி கோப்பையை வென்றதற்கு டெவோன் கான்வே முக்கிய பங்காற்றியுள்ளார்.

கடந்த சீசனில் டாப் ஆர்டரில் விளையாடிய கான்வே 51.69க்கும் அதிகமான சராசரியில் 672 ரன்கள் எடுத்திருந்தார். அவர் விளையாடிய 16 போட்டிகளில், சுமார் 140 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 6 அரை சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் நடப்பாண்டிற்கான சீசன் தொடங்க உள்ள நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சிஎஸ்கே வீரர் டெவோன் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் சிக்கல்! appeared first on Dinakaran.

Related Stories: