பத்தலப்பல்லி சோதனைச்சாவடி அருகே ஒற்றை யானை நடமாட்டம்

பேரணாம்பட்டு, மார்ச் 4: பத்தலப்பல்லி சோதனைச்சாவடி அருகே ஒற்றை யானை நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பேரணாம்பட்டு- வி.கோட்டா சாலையில் உள்ள பத்தலபல்லி அருகே மாநில எல்லை போலீஸ் மற்றும் வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன. அந்த சோதனைச்சாவடி அருகே நேற்று வனப்பகுதியில் இருந்து ஒற்றை யானை திடீரென்று வந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சோதனைச்சாவடியில் இருந்த பணியாளர்கள், உடனே தங்களது அறைகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக அங்கு சுற்றித்திரிந்த யானை பின்னர் வி.கோட்டா செல்லும் மலைப்பாதை வழியாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post பத்தலப்பல்லி சோதனைச்சாவடி அருகே ஒற்றை யானை நடமாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: