திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயணிகள் குற்றச்சாட்டு

பெரம்பலூர்,மார்ச்4: இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசினார்.

பெரம்பலூர் நகர திமுக சார்பில்.”எல்லோருக்கும் எல்லாம்” திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. நகர அவைத் தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல்பாரூக் வரவேற்றார். நகர துணைச் செயலாளர்கள் ரெங்கநாதன், கல்பனா முத்துக்குமார், பொருளாளர் முகமது அசாருதீன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனி டும் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசியதாவது:
மகளிருக்கான உரிமைகளை, சலுகைகளை வழங்குவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி 1கோடிக்கும் மேலான பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பெண்கள் அனைவரும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க மகளிர் இலவசப் பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் கட்டித் தரப் படும் என அறிவித்து 2024-2025 ம் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் பன்னி ரண்டாம் வகுப்பு வரை படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கும், \”தமிழ் புதல்வன்\” திட்டம் ரூ 360 கோடியில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

13 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ 4,818 கோடி மதிப்பில் கூட்டுறவு நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம் பாட்டு வாரியத்தின் மூலம் 79திட்டப் பகுதிகளில் ரூ 2,822 கோடி மதிப்பீட்டில், 25 ஆயிரம் குடியிருப்புகள் அமைக்கும்பணிகள் நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் சொல்லி அறிவித்த திட்டங்கள் மட்டுமன்றி சொல்லாமல் அறிவித்து நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களும் மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் இந்தியாவிற்கே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்டசெயலாளர் குன்னம் இராஜேந்திரன், மாநில நிர்வாகி துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இராஜ்குமார், நல்ல தம்பி, மதியழகன், ராஜேந்திரன், டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப் பினர் அண்ணாதுரை, ஒன்றியக்குழு தலைவர்கள் மீனா அண்ணாதுரை, ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ஆதவன் (எ) ஹரிபாஸ்கர், மகாதேவி ஜெயபால், டாக்டர் கருணா நிதி, தொ.மு.ச மாவட்ட கவுன்சில் பேரவைத் தலை வர் கே.கே.எம்.குமார், பேர வைச் செயலாளர் ரெங்க சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் அப்துல்கரீம் நன்றி கூறினார்.

The post திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் பயணிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: