அரசு பெண்கள் தொழிற்பயிற்சி மையம்: பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை

 

காரியாபட்டி, மார்ச் 4: காரியாபட்டி வட்டாரத்தில் அரசு பெண்கள் தொழிற் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்று பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. காரியாபட்டி சமம் பெண்கள் கூட்டமைப்பு சார்பாக சர்வதேச மகளிர் தினவிழா மற்றும் சமத்துவ மக்கள் மன்ற 15வது பொதுக் குழு கூட்டம் நடை பெற்றது. விழாவுக்கு சமம் நிறுவனர் ஞானபாக்கியம் தலைமை வகித்தார்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், பொதுச் செயலாளர், பாப்பாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் எஸ்தர் வரவேற்றார். மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குநர் நாச்சியார் அம்மாள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில், வட்டார அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை மையம் மற்றும் மகளிர் குறை தீர்க்கும் மையம் அமைக்க வேண்டும். காரியாபட்டி வட்டாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக அரசு பெண்கள் தொழிற் பயிற்சி மையம் அமைக்க வேண்டும்,காரியாபட்டியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு நிரந்தரமான கட்டிடம் அமைக்க வேண்டும். காரியாபட்டியில் காய்கறி வாரச்சந்தை மற்றும் ஆட்டுச் சந்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் சமம் கட்டமைப்பு தலைவராக பாப்பாத்தி, செயலாளராக சங்கீதா, பொருளாளராக எஸ்தர் மற்றும் துணைத் தலைவர்களாக ஞான பாக்கியம், அவ்வா நாச்சியார் ராஜம்மாள், ஜெயந்தி, துணை செயலாளர்களாக ஆதிலட்சுமி வசந்தி, மனோன்மணி, உமாதேவி, சாந்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் நிகழ்ச்சிகளை கல்பனா, முத்துபிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

The post அரசு பெண்கள் தொழிற்பயிற்சி மையம்: பெண்கள் கூட்டமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: