ரஞ்சி அரையிறுதி இன்று தொடக்கம்

மும்பை: ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன. நாக்பூர், விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் விதர்பா – மத்தியப் பிரதேசம் அணிகள் மோதுகின்றன. விதர்பா அணி அக்‌ஷய் வாத்கர் தலைமையிலும், மத்தியப் பிரதேசம் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா தலைமையிலும் களமிறங்குகின்றன. மும்பை, பந்த்ரா குர்லா வளாகத்தில் தொடங்கும் 2வது அரையிறுதியில் தமிழ்நாடு – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி, 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஞ்சி அரையிறுதியில் விளையாட உள்ளது. லீக் சுற்றில் முதல் 2 போட்டிகளின் முடிவில் 1 புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் பின்தங்கியிருந்த தமிழ்நாடு, பின்னர் விளையாடிய 6 போட்டியில் 5 வெற்றிகளை வசப்படுத்தி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சாய் சுதர்சன், இந்திரஜித், ஜெகதீசன் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதும் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வருகையும் தமிழ்நாடு அணிக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

நடப்பு சீசனில் 47 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிக்கும் சாய் கிஷோர், அவருக்கு உறுதுணையாக செயல்படும் அஜித் ராம் சுழல் கூட்டணி மும்பைக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. அதே சமயம், ரகானே தலைமையிலான மும்பைஅணியும் பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், அரையிறுதியில் அனல் பறப்பது உறுதி.

* தமிழ்நாடு: சாய் கிஷோர் (கேப்டன்), பிரதோஷ் ரஞ்சன் (துணை கேப்டன்), அஜித் ராம், பாபா இந்திரஜித், நாராயண் ஜெகதீசன், சுரேஷ் லோகேஷ்வர் (கீப்பர்), முகமது முகமது, டி.நடராஜன், பாலசுப்ரமணியன் சச்சின், சாய் சுதர்சன், சந்தீப் வாரியர், விஜய் ஷங்கர், திரிலோக் நாக், விமல் குமார், வாஷிங்டன் சுந்தர்.

* மும்பை: ரகானே (கேப்டன்), அதர்வா, அவஸ்தி, ஜெய் பிஸ்டா, தேஷ்பாண்டே, ராய்ஸ்டன், ஷிவம் துபே, சர்பராஸ் கான், தனுஷ் கோடியன், தவால் குல்கர்னி, புபேன் லால்வானி, ஷாம்ஸ் முலானி, சுவேத் பார்கர், பிரசாத் பவார், ஹர்திக் தமோர், ஷ்ரேயாஸ் அய்யர்.

The post ரஞ்சி அரையிறுதி இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: