லீப் வருடத்தில் பிறந்த 9 குழந்தைகள் 4 ஆண்டுக்கு பிறகு தான் பிறந்தநாள் வரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படம் அதர்சில் உள்ளது

வேலூர், மார்ச் 1: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லீப் வருடத்தில் நேற்று 9 குழந்தைகள் பிறந்தது. புவி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர முன்னூற்று அறுபத்து ஐந்தேகால் நாள்கள் ஆகின்றன. இந்த கால் நாளை கணக்கிடாமல், ஆண்டுக்கு 365 நாள்கள் என்றே அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். எனவே, பிப்ரவரி மாதத்தில் 28 நாள்கள் மட்டுமே வருகிறது. மீதமுள்ள கால் நாட்களைச் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாக கணக்கிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும். இதுபோல் பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர். அதன்படி 2024 மற்றும் 2028 என்று அடுத்தடுத்த 4 ஆண்டுகள் கழித்துதான் லீப் ஆண்டுகள் வரும். எனவே லீப் ஆண்டில் பிப்ரவரி 29ம் தேதி பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்த நாள் கொண்டாட முடியும். அந்த வகையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் லீப் ஆண்டான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று இரவு 7 மணி வரை 7 ஆண், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 9 குழந்தைகள் பிறந்தது. இவர்களுக்கு அடுத்த பிறந்த நாள் வரும் 2028ம் ஆண்டில் தான் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post லீப் வருடத்தில் பிறந்த 9 குழந்தைகள் 4 ஆண்டுக்கு பிறகு தான் பிறந்தநாள் வரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படம் அதர்சில் உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: