புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம்

புதுச்சேரி, மார்ச் 1: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் செய்தனர். பொதுமக்களின் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு நிலவியது. சர்வதேச நகரமான ஆரோவில் உதய தினத்தையொட்டி பாரத் நிவாஸ் கலையரங்கத்தில் நடைபெறும் கட்டுரைப்போட்டி விருது வழங்கும் விழா மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தார்.

நான்கு வருடத்திற்கு ஒருமுறை வரும் ஆரோவில் உதய தினமான பிப்ரவரி 29ம் தேதியான நேற்று அன்னையின் கோல்டன் நாளாக அனுசரிக்கப்படுவதால் அரவிந்தர் மற்றும் அன்னையின் நினைவிடம் கோல்டன் கலரில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த நினைவிடத்தில் ஆளுநர் ரவி சிறப்பு தரிசனம் செய்தார். பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. சுமார் அரைமணி நேரம் அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்த ஆளுநர் ரவி புறப்பட்டு சென்றபிறகு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளில் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

The post புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: