கூட்டுறவு சங்க புதிய தலைமை அலுவலக திறப்பு விழா திமுகவை ஒழிப்பேன் என்பவர்கள்தான் ஒழிந்து போவார்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆவேசம்

கூடுவாஞ்சேரி, மார்ச் 1: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து கழக பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய தலைமை அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
இதில் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் கார்த்திக்தண்டபாணி, ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி, துணை தலைவர் ரேகாகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு, குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தனர். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், திமுகவை ஒழிப்பேன் என்று சொல்பவன் தான் ஒழிந்து போவானே தவிர திமுக ஒருபோதும் ஒழிந்து போவாது. ஒன்றிய அரசு செய்த துரோகங்களை பொதுமக்களிடத்தில் எடுத்து சொல்லுங்கள்’
என்றார்.

காஞ்சிபுரம்: ஓரிக்கை தொழிற்பேட்டை, தமிழ்நாடு சரிகை ஆலை வளாகத்தில், சிறிய அளவிலான கைத்தறி பூங்கா, காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு வளாகம் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் கல்வெட்டு மற்றும் காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் கல்வெட்டினையும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட இரும்புலிச்சேரி ஊராட்சியில் பாலாற்றின் குறுக்கே சுமார் 50 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தை அகற்றிவிட்டு ₹51.87 கோடியில் புதிகாக உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக பணியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புதிய சுற்றுலா மாளிகை திறப்பு
செங்கல்பட்டில் ₹6.79 கோடியில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட சுற்றுலா மாளிகை திறப்பு விழா நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்று, புதிய சுற்றுலா மாளிகையை திறந்து வைத்தனர். இதில், காஞ்சிபுரம் எம்பி செல்வம், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ, நகரமன்ற தலைவர்கள் சண்முகம், கார்த்திக், தேன்மொழி நரேந்திரன் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post கூட்டுறவு சங்க புதிய தலைமை அலுவலக திறப்பு விழா திமுகவை ஒழிப்பேன் என்பவர்கள்தான் ஒழிந்து போவார்கள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: