செல்லூர் இணைப்பு பாலத்தில் மின் விளக்குகள் அவசியம்

 

மதுரை, மார்ச். 1: செல்லூர் இணைப்பு பாலத்தில், மின்விளக்குகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை நகருக்குள் வரும் வாகனங்கள் கோரிப்பாளையத்தில் இருந்து, வைகை வடகரை சாலை வழியாக திண்டுக்கல் சாலையை அடைய, தத்தனேரி பாலத்தில் இருந்து வைகை வடகரை சாலையை இணைக்கும் விதமாக, கூடுதல் இணைப்பு பாலம் கட்டப்பட்டது. ரூ.9.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த இணைப்பு மேம்பாலம், தையல் முறையில் இணைக்கப்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, ‘‘கடந்த 2023 நவ.24ம் தேதி திறக்கப்பட்ட இப்பாலம் ஒரு வழிப்பாதையாக உள்ளது. இந்நிலையில், இப்பாலத்தில் தற்போது வரை மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருக்கிறது. மின்விளக்குகள் இன்றி, இரவு நேரங்களில் இந்த வழியாக வரும் இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். அதேபோல் பாலத்தில் இறங்கும் பகுதிகளில், ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் நிலையும் ஏற்பட்டுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனித்து, பாலத்தில் மின்விளக்குகள் பொருத்துவதுடன், சாலையையும் சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

The post செல்லூர் இணைப்பு பாலத்தில் மின் விளக்குகள் அவசியம் appeared first on Dinakaran.

Related Stories: