திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி வசூல் மையம் அமைப்பு

திருப்பூர், பிப்.29: திருப்பூர் மாநகராட்சி, 2 வது மண்டலத்திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் கணினி வரி வசூல் மையத்தை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் தங்களுடைய சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை செலுத்த மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு இடங்களில் புதியதாக கணினி வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி, 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர் ரோடு பாண்டியன் நகர் பகுதியில் நேற்று கணினி வரி வசூல் மையம் திறக்கப்பட்டது. இந்த கணினி வரி வசூல் மையத்தை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தொடர்ந்து 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், உதவி கமிஷனர் முருகேசன் மாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக பகுதி கழக செயலாளர் ஜோதி ஆகியோர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி வசூல் மையம் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: