சாலையில் கிடந்த 160 கிலோ போதை பொருட்கள் போலீசார் விசாரணை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே

பள்ளிகொண்டா, பிப்.29: பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீசப்பட்டு கிடந்த 160 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை 3 மணியளவில், பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 15க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் கேட்பாரற்று கிடந்தது. இதனை கண்ட போலீசார் பைகளை திறந்து பார்த்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், கூல்லிப் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து போலீசார், அந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பைகளில் இருந்த 160 கிலோ குட்கா, பான்மசாலா உட்பட போதைப் பொருட்களின் மதிப்பு ₹1.50 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும், இரவு நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னைக்கு குட்கா உட்பட போதைப் பொருட்களை கடத்தும் கும்பல், போலீசாரை திசை திருப்பி அதிக அளவில் கடத்த முயற்சி செய்துள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

The post சாலையில் கிடந்த 160 கிலோ போதை பொருட்கள் போலீசார் விசாரணை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே appeared first on Dinakaran.

Related Stories: