ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ: ஷ்ரேயாஸ், இஷான் இல்லை

புதுடெல்லி: வருடாந்திர ஒப்பந்தம் பெற்ற இந்திய சீனியர் அணி வீரர்களுக்கான பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. முன்னணி வீரர்கள் ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் பட்டியலில் இடம் பெறவில்லை. 2023-24 சீசனுக்கான ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் (அக்.1, 2023 – செப். 30, 2024) ஏ+ கிரேடு, ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என 4 பிரிவுகளில் மொத்தம் 30 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த சீசனில் இது 26 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பி கிரேடில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயாஸ், சி கிரேடில் இடம் பெற்றிருந்த இஷான் கிஷனுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை.

ஏ+ கிரேடு: விராத் கோஹ்லி, ரோகித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.
ஏ கிரேடு: ஆர்.அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா.
பி கிரேடு: சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால்.
சி கிரேடு: ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெயிக்வாட், ஷர்துல் தாகூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் பத்திதார்.

The post ஒப்பந்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ: ஷ்ரேயாஸ், இஷான் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: