பொறுப்புடன் விளையாடிய கரிம் ஜனத் 41 ரன் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அயர்லாந்து பந்துவீச்சில் மார்க் அடேர் 16.5 ஓவரில் 5 மெய்டன் உள்பட 39 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கிரெய்க் யங், கர்டிஸ் கேம்பர் தலா 2, மெக்கார்தி 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து, முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்துள்ளது. கேம்பர் 49, பீட்டர் மூர் 12, கேப்டன் பால்பிர்னி 2, வோயர்கோம் 1 ரன்னில் வெளியேறினர்.
ஹாரி டெக்டர் 32 ரன், பால் ஸ்டர்லிங் 2 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.
The post மார்க் அடேர் வேகத்தில் சரிந்தது ஆப்கானிஸ்தான் appeared first on Dinakaran.