வோஸ்னியாக்கியை வீழ்த்தினார் பிளிங்கோவா

நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெறும் சிம்பயோடிகா சான் டீகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டென்மார்க் நட்சத்திரம் கரோலின் வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியைத் தழுவினார்.

முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான வோஸ்னியாக்கி (33 வயது, 206வது ரேங்க்) முதல் சுற்றில் ரஷ்யாவின் அன்னா பிளிங்கோவா (25 வயது, 51வது ரேங்க்) உடன் நேற்று மோதினார். முதல் செட்டை அவர் 6-1 என்ற கணக்கில் அதிரடியாகக் கைப்பற்றி முன்னிலை பெற்ற நிலையில், அடுத்த 2 செட்டிலும் அபாரமாக விளையாடி பதிலடி கொடுத்த பிளிங்கோவா 1-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் 2 மணி நேரம் போராடி வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

செக். குடியரசின் கேதரினா சினியகோவா, டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா (உக்ரைன்), டோனா வேகிச் (குரோஷியா), டேலா பிரெஸ்டன் (ஆஸி.) ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றியை பதிவு செய்தனர். ஜெர்மனியின் டட்டியானா மரியாவுடன் மோதிய கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் முதல் செட்டை கைப்பற்றினாலும் 7-6 (9-7), 0-4 என்ற ஸ்கோருடன் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

The post வோஸ்னியாக்கியை வீழ்த்தினார் பிளிங்கோவா appeared first on Dinakaran.

Related Stories: