×

பெரம்பலூரில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைவோம் மகிழ்வோம் செயல்பாடுகள் உதவி திட்ட அலுவலர் பார்வையிட்டார்

பெரம்பலூர்,பிப்.28: இணைவோம் மகிழ்வோம் செயல்பாடுகள் நேற்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில்நடைபெற்றது. ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வி உதவித்திட்ட அலுவலர் ரமேஷ் பார்வையிட்டார். இணைவோம் மகிழ்வோம் நிகழ்ச்சியின் மூலம் மாற்றுத்திறன் மாணவர் களோடு அனைத்து மாணவர்களும் இணைந்து அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உறுதிப் படுத்தும் விதமாக IE -CwD இணைவோம் மகிழ்வோம் ( Environment Building) செயல்பாடுகள் நேற்று (27ம்தேதி) அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடை பெற்றது.

இதன்படி பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம் டிஇஎல்சி நடுநிலைப்பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வி உதவித்திட்ட அலுவலர் (தொடக்கநிலை) ரமேஷ், தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற் பார்வையாளர் தேவகி, வட்டார IE ஒருங்கிணைப் பாளர் சுப்ரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். புதிர் விளையாட்டு, தனி நடிப்பு, பலூன் விளை யாட்டு போன்ற போட்டிகள் சாதாரண மாணவர்களு டன், பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் சேர்த்து குழுவாக இணைந்துபோட் டிகள் நடத்தப்பட்டது. இதன் மூலம் மாற்றுத் திறனாளி மாணவர்களின் தனித்தி றன் வெளிப்படுத்தப்படுவ துடன் மற்ற மாணவர்க ளோடு இணைந்து செயல் படும் போது சமவாய்ப்பும், பங்களிப்பும் உறுதிசெய் யப்படுகிறது என உதவித் திட்ட அலுவலர் கூறினார்.

வட்டார IE ஒருங்கிணைப் பாளர் பள்ளிகளில் முதல் திங்கள் கிழமை காலை இறைவணக்கக் கூட்டத் தில் எடுக்கப்படும் ஒற்று மையை வளர்ப்போம் உறு திமொழி, சைகை மொழி விழிப்புணர்வு குறித்த தக வல்கள் மற்றும் CwD மாண வர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் நலத்திட்டங் கள் குறித்தத் தகவல்களை எடுத்துரைத்து மாணவர்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரி யர்களுடன் இணைந்து சிற ப்பு பயிற்றுநர்கள் செய்திரு ந்தனர். முன்னதாக துறை மங்கலம் டிஇஎல்சி நடு நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் சாம்சன் ஆசீர் வாதம் வரவேற்றார். முடி வில் சிறப்புப் பயிற்றுநர் மகேஸ்வரி நன்றி கூறி னார்.

The post பெரம்பலூரில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இணைவோம் மகிழ்வோம் செயல்பாடுகள் உதவி திட்ட அலுவலர் பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Ramesh ,Anung Well School ,Government and ,Government Assisted Schools ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல்...