×

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,பிப்.28: பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நேற்று (27ம்தேதி) காலை 11.30 மணிக்கு அகிலஇந்திய கட்டுநர் சங்கம் சார்பில், கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சந்தை விலையைக் குறைத்தோ அல்லது சந்தை விலைக்கு ஏற்றவாறு பட்டியலை உயர்த்தி யோ தரவேண்டும். சிமெண்ட், தார் மற்றும் கம்பிகளின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் நடை பெறும் போது, விலை விகிதாச்சாரத்துடன் கூடிய விலைப்பட்டியல் வழங்கப் படுவதைப் போல, கனிம பொருட்களான கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் பி-சாண்ட் விலை மாற்றத் திற்கு வழிமுறைகள் ஏற் படுத்தித் தரவேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார்.

சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 பேர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தமிழக முதல்வ ருக்கு மனுஅனுப்பவேண்டி பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் மூலமாக தங்களது கோரிக்கையை தெரிவிக்கும் விதமாக, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் கூடு தல் நேர்முக உதவியாளர் (நிலம்) மணிகண்டன் என் பவரிடம் கோரிக்கை மனு வை கொடுத்துவிட்டுக் கலைந்து சென்றனர்.

The post கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து பெரம்பலூரில் அகில இந்திய கட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : All India Builders Association ,Perambalur ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி