தொல்லியல் அகழாய்வு கண்காட்சி

 

கீழக்கரை, பிப். 28: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் தொல்லியல் அகழாய்வுகள் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியை தலைமையாசிரியர் புரூணா ரெத்னகுமாரி துவக்கி வைத்தார். மன்றச் செயலர் ராஜகுரு அகழாய்வு குறித்து பேசினார்.

பரவலாகத் தோண்டும் வகை, ஆழத்தோண்டும் முறை, சுற்று, நீள்குழி, குகை, சவக்குழி, நீருக்கடியில் அகழாய்வு முறைகள், தொல்பொருள்களின் படங்கள், அழகன்குளம், பெரியபட்டினம் பகுதிகளில் மேற்பரப்பாய்வில் கண்டெடுத்த சீன பானை ஓடுகள், சங்குகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அகழாய்வு அறிமுகம், அகழாய்வு முறைகள், அழகன்குளம், தேரிருவேலி, தொண்டி மற்றும் பெரியபட்டினம் அகழாய்வு குறித்து மாணவிகள் விளக்கமளித்தனர். கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள், தொல்பொருட்கள் மற்றும் விளக்கவுரை
மூலம் அகழாய்வு முறைகளை மாணவ, மாணவியர்கள் அறிந்துகொண்டனர்.

The post தொல்லியல் அகழாய்வு கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: