சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்: பல்வேறு அமைப்பினர் பங்கேற்பு

வேளச்சேரி: சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, பள்ளிகரணை‌ 189வது வார்டு அலுவலகம் அருகே பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து, சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்,

பள்ளிகரணை சாதி ஆணவ படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்ட பள்ளிகரணை பிரவீன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை மாநகராட்சி 189வது வார்டு அலுவலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமை வகித்தார்.

இதில், முன்னணியின் மாநில சிறப்பு தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே‌மகேந்திரன், பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ், துணை பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன், மாவட்ட தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் த.இளையா, சிபிஎம் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தீ.சந்துரு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.சித்ரகலா, ஆகியோர் கலந்துகொண்டு கட்டண உரையாற்றினர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்: பல்வேறு அமைப்பினர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: