திமுக தீர்மான பிரசார கூட்டம்

காரியாபட்டி: .காரியாபட்டியில் திமுக இளைஞரணி சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்டம், திருச்சுழி தொகுதி திமுக இளைஞரணி சார்பாக 2-வது மாநில மாநாட்டு தீர்மாண விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் காரியாபட்டியில் நடை பெற்றது. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் செந்தில் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அரசகுளம் சேகர் வரவேற்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் – சிவகாசி ஜீவா மாநாட்டு தீர்மானங்கள் குறித்து பேசினார்.

The post திமுக தீர்மான பிரசார கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: