தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட்டில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட்டில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழகத்தின் பொருளாதாரத்தை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த நில நாட்களுக்கு முன்னர் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வந்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின்போது வியட்நாம் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் மின்வாகன தொழிற்சாலையை சில்லா நத்தம் பகுதியில் 408 ஏக்கர் பரப்பில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் கார் தொழிற்சாலை அமைக்கிறது. கார் தொழிற்சாலை மூலமாக 2500 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post தூத்துக்குடி மாவட்டம் சில்லாநத்தம் சிப்காட்டில் மின்சார கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்! appeared first on Dinakaran.

Related Stories: