ராஜபாளையம் கல்லூரியில் பயிற்சி பட்டறை வகுப்புகள்

 

ராஜபாளையம், பிப். 25: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரி ஃப்ளட்டர் பயன்படுத்தி மொபைல் ஆப் உருவாக்கம் குறித்த இரண்டு நாள் பயிற்சி பட்டறை வகுப்புகள் நடைபெற்றது. ராஜபாளையம், ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியின், தகவல் தொழில்நுட்பத் துறையானது ஆர்.ஐ.டி இன்ஃபோட்ரிக்ஸ் சங்கத்துடன் இணைந்து ஃப்ளட்டர் பயன்படுத்தி மொபைல் ஆப் உருவாக்கம் என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த பயிற்சி வகுப்பில் இரண்டாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை & கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள் துறையைச் சார்ந்த 36 மாணவர்களுக்கு கலந்து கொண்டனர். ஃப்ளட்டர் முழு அடுக்கு பொறியாளர் பரத் விரிவுரையாற்றினார். கல்லூரி முதல்வர் கணேசன், துணைமுதல்வர் ராஜகருணாகரன் மற்றும் நிர்வாகப் பொது மேலாளர் செல்வராஜ் ஆகியோர் இப்பயிற்சிக்கு முன்னிலை வகுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராம்கோ கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் அனுசுயா வழிகாட்டுதலின்படி உதவிப் பேராசிரியர்கள் சக்கரவர்த்தி மற்றும் பாலகணேஷ் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

The post ராஜபாளையம் கல்லூரியில் பயிற்சி பட்டறை வகுப்புகள் appeared first on Dinakaran.

Related Stories: