குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

 

கோவை பிப் 25: கோவை மாநகராட்சி ஆரியன் சோப் வீதி, சடையப்ப தேவர் வீதி, ராமசாமி வீதி உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் கூடுதல் விலை கொடுத்து லாரியில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் ஆழ்துளை நீரும் அந்த பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பெண்கள் கைகளில் காலி குடங்களை ஏந்தியபடி நேற்று கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஒலம்பஸ் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதி அடைந்தனர். மறியல் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்குவதாக தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: