விபத்தில் அப்பளம்போல நொறுங்கிய காரில் இருந்து சடலத்தை மீட்கும் ஊழியர்கள். உள்படம்: தேபாஷிஷ் தண்டா தோசை, இட்லியுடன் ஆட்டு ரத்தத்தை அம்மனுக்கு படையல் வைத்த பக்தர்கள் கே.வி.குப்பம் அருகே சுவாரஸ்யம் மாளியாப்பட்டு கிராமத்தில் தோசாலம்மன் திருவிழா

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் அருகே மாளியாப்பட்டு கிராமத்தில் தோசை, இட்லியுடன் ஆட்டு ரத்தத்தை அம்மனுக்கு பக்தர்கள் படையல் வைத்த திருவிழா சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாளியாப்பட்டு கிராமத்தில் தோசாலம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் கூழ்வார்த்தல், முத்து தேரில் அம்மன் திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 2ம் நாளான நேற்று அம்மனுக்கு காலையிலேயே இட்லி, தோசை, கும்பசோறு, படைத்துவிட்டு பலி சுற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் அம்மன் வேடமிடும் பக்தர் ஒருவர் உயிருடன் ஆட்டினை பிடித்து உடலை கிழித்து அதன் குடலினை கழுத்தில் மாலையாக போட்டு வலம் வந்தார். மேலும் ஆட்டு ரத்தத்தை அம்மன் படையலில் வைக்கப்படும் இட்லி, தோசையின்‌ மீது தெளித்து சாமி அருவந்து ஆடினார். இந்த நிகழ்வு முடிவில் அந்த உணவினை எடுக்க அங்குள்ள பக்தர்கள் முட்டி மோதிகொண்டனர். இதனை காணும் வெளியூர் வாசிகளுக்கு மிகவும் அதிசயமாக இருந்தது.

The post விபத்தில் அப்பளம்போல நொறுங்கிய காரில் இருந்து சடலத்தை மீட்கும் ஊழியர்கள். உள்படம்: தேபாஷிஷ் தண்டா தோசை, இட்லியுடன் ஆட்டு ரத்தத்தை அம்மனுக்கு படையல் வைத்த பக்தர்கள் கே.வி.குப்பம் அருகே சுவாரஸ்யம் மாளியாப்பட்டு கிராமத்தில் தோசாலம்மன் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: