×

வருகின்றனர். பெரம்பலூரில் கல்வியும் காவலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, ‘கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வுத் திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காவல்நிலைய இன்ஸ்பெக்டர், சப்.இன்ஸ்பெக்டர் ஆகியோரின் தலைமையில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவிகளிடம் போதைப் பொருட்கள், உபயோகிப்பதனால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு கள், போக்குவரத்து விதி களை பின்பற்றுதல் ஏரி, குளம், ஆறு போன்றவை களில் குளிக்கசெல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற் றும் தற்கொலைகள் போன் றவை குறித்தும், சாதியப் பாகுபாடுகளை ஒழித்தல் குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது.

The post வருகின்றனர். பெரம்பலூரில் கல்வியும் காவலும் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Kalviyum Kavalum ,SP ,Shyamla Devi ,Police Station ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்