×

அரியலூர் அருகே பைக் மீது கார் மோதி கணவர் பலி

அரியலூர்: கீழப்பழுவூர் அருகேயுள்ள வெற்றியூரைச் சேர்ந்தவர் சேகர்(40). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், நேற்று தனது மனைவி சத்தியாவை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வெற்றியூருக்கு சென்றார். தவுத்தாய்குளம் உடையார் ஏரி அருகே சென்ற போது எதிரே அரியலூர் நோக்கி வந்த கார் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சேகர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அரியலூர் காவல் துறையினர் சேகரின் உடலையும், பலத்த காயமடைந்த அவரது மனைவி சத்தியாவையும், கார் ஓட்டுநரையும் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி

The post அரியலூர் அருகே பைக் மீது கார் மோதி கணவர் பலி appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Shekar ,Vithiur ,Kalappuvuur ,Satya ,Dautthaykulam ,Udaiyar Lake ,Eteere Ariyalur ,Dinakaran ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...