குட்டியுட‌ன் காட்டு யானைகள் முகாம்: பேரிஜம் ஏரிக்கு செல்ல‌ தற்காலிகமாக தடை


திண்டுக்க‌ல் : கொடைக்கான‌ல் வனம்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜ‌ம் ஏரியில் காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தால் த‌ற்காலிக‌மாக‌ இன்று முத‌ல் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல‌ தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ச‌ர்வதேச‌ சுற்றுலாத‌ல‌மாகும்,இங்கு வனத்துறை கட்டுப்பாட்டில் பேரிஜம் ஏரி உள்ளது, இந்த பகுதியில் மனத்திற்கு புத்தணர்ச்சி அளிக்கும் விதமாக மதிகெட்டான் சோலை,தொப்பி தூக்கி பையர் வாட்ச் டவர் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.

இந்த சுற்றுலா தலத்திற்கு செல்ல வனத்துறை அலுவலகத்தில் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது வழக்கம், இந்நிலையில் நேற்று மாலை முதல் இந்த‌ பேரிஜ‌ம் ப‌குதியில் 3க்கும் மேற்ப‌ட்ட‌ காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தால் இன்று முதல் ம‌று உத்தரவு வ‌ரும் வ‌ரை பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌ த‌டைவிதித்துள்ள‌தாக‌ வ‌ன‌த்துறையின‌ர் அறிவித்துள்ள‌னர், மேலும் பேரிஜ‌ம் ஏரிப்ப‌குதியில் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌ யானை கூட்ட‌ம் வேறு ப‌குதிக்கு செல்கின்ற‌தா என‌வும் வ‌ன‌த்துறையின‌ர் க‌ண்காணித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

The post குட்டியுட‌ன் காட்டு யானைகள் முகாம்: பேரிஜம் ஏரிக்கு செல்ல‌ தற்காலிகமாக தடை appeared first on Dinakaran.

Related Stories: