இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் தீர்க்கப்படும்: சரத்பவார் உறுதி

புனே: இரண்டு மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கிடையே உள்ள தொகுதி பங்கீடு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்ப்பதற்கு முயற்சிக்கப்படும் என்று சரத்பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் உள்ள கோலாப்பூரில் சரத்பவார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற ஒருசில மாநிலங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு விஷயத்தில் கருத்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றது. சாத்தியமான இடங்களில் பிரச்னைகளை தீர்க்கிறோம். இதுபோன்ற சில மாநிலங்களில் , அந்த மாநிலங்களுக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள் இந்த பிரச்னைகளை பேசி தீர்ப்பார்கள். இந்த செயல்முறை விரைவில் தொடங்கும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் வெளியேறியது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் பாஜ கடந்த 10 ஆண்டுகால செயல்பாடுகள் மற்றும் எதிர்கட்சிகள் குறித்த வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் ஆதர்ஷ் முறைகேடு மற்றும் அசோக் சவான் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ஒரு வகையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று கருதினோம். சவானின் கட்சித் தாவல்அந்த அச்சுறுத்தலின் விளைவாகும்” என்றார்.

The post இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் தீர்க்கப்படும்: சரத்பவார் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: