பாஜ மாநிலங்களவை வேட்பாளரின் மகனிடம் வழிப்பறி?

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜ சார்பில் மாநிலங்களவை தேர்தலில் சஞ்சய் சேத் போட்டியிடுகின்றார். இவரது மகன் குனால் சேத் நேற்று முன்தினம் இரவு திருமணம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு காரில் தனது மனைவியுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரது காரை சிலர் முந்தி செல்ல முயன்றதோடு அவரிடமும், அவரது மனைவியிடமும் வழிபறியில் ஈடுபட முயற்சித்தாக அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகாரை போலீசார் மறுத்துள்ளனர். சாலையில் முந்தி செல்ல முயன்றது தொடர்பாக இருவரிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளதாகவும்,வழிப்பறி நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

The post பாஜ மாநிலங்களவை வேட்பாளரின் மகனிடம் வழிப்பறி? appeared first on Dinakaran.

Related Stories: