மாநில ‘‘மைக்ரோபிஸ்ட்டா 2024’’ போட்டி கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் சாதனை

கோவில்பட்டி, பிப். 21: மதுரை அமெரிக்கன் கல்லூரி நுண்ணுயிரியல் துறை சார்பாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ‘‘மைக்ரோபிஸ்ட்டா 2024’’ என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளில் கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறை முதுகலை மற்றும் இளங்கலை மாணவ- மாணவிகள் பங்கேற்று பென்சில் ஓவியம், சுவரிதழ் போட்டி ஆகியவற்றில் முதலிடத்தையும், உவமை போட்டியில் இரண்டாம் இடத்தையும், வினாடி வினா, பெட்ரி ஓவியம் மற்றும் குறும்படம் தயாரித்தல் போட்டிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளைக் கே.ஆர்.கல்வி குழுமங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணை தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாசலம், முதல்வர் மதிவண்ணன், நுண்ணுயிரியல் துறை தலைவர் கண்ணன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

The post மாநில ‘‘மைக்ரோபிஸ்ட்டா 2024’’ போட்டி கோவில்பட்டி கல்லூரி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: