கீழ்வேளூர் தாலுகாவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (21ம் தேதி) காலை 9 மணி முதல் நாளை (22ம் தேதி) காலை 9 மணி வரை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் கலந்து கொள்ள உள்ளதால் பொதுமக்கள் தங்களது கோரிக்கையை தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்தள்ளார். முதல்வரின் உன்னதமான திட்டமான மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகாவில் இன்று (21ம் தேதி) காலை 9 மணி முதல் நாளை (22ம் தேதி) காலை 9 மணி வரை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தான கள ஆய்வு செய்தல் மற்றும் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று கூட்டங்கள் நடைபெற உள்ளது.

The post கீழ்வேளூர் தாலுகாவில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் appeared first on Dinakaran.

Related Stories: