ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ேகாயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி வெள்ளையம்மாள் மற்றும் கருப்பசாமி கோயி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விழாவை முன்னிட்டு புனித நீர் குடம் அழைப்பு செய்யப்பட்டு, வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்ட முதல் கால பூஜைகள் நடைபெற்றது. 2ம் நாளாகிய நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்பட பல்வேறு சடங்குகள் நடைபெற்று, பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் பூஜிக்கப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானத்திற்கு சக்தி நிலை நிறுத்தப்பட்டு, யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகி ,விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டு ஆசி பொழிந்ததால் பக்தர்கள் பக்தி பரவசமடைந்து கோவிந்தா கோஷமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று, மூலஸ்தானத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை விழா குழுவினரும், 5 பங்காளிகளும் ,கிராம பொதுமக்களும் செய்திருந்தனர்.

The post ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ேகாயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: