டாஸ்மாக் பார்களில் சிசிடிவி கட்டாயம்: தேர்தல் ஆணையம் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சியில் மதுபானம் அன்பளிப்பாக வழங்குவதை தடுக்கும் வகையில், டாஸ்மாக் பார்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: இந்திய துணைத்தேர்தல் ஆணையர் கடந்த 6ம் தேதி நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்2, எப்.எல் 3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, டாஸ்மாக் பார்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த மதுவிலக்குத்துறை ஆணையார் உத்தரவிட்டுள்ளார். எனவே, டாஸ்மாக் பார்களில் ஒப்பந்ததாரர்கள் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். சிசிடிவி கேமராக்கள் பொருத்த தவறும்பட்சத்தில் டாஸ்மாக் பார்களின் ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post டாஸ்மாக் பார்களில் சிசிடிவி கட்டாயம்: தேர்தல் ஆணையம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: