கஞ்சா விற்ற 2 பேர் கைது கல்லூரி அருகில்

குடியாத்தம், பிப். 20: குடியாத்தம் அடுத்த காந்திநகரில் உள்ள அரசு கலைக்கல்லூரி பின்புறம் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் நேற்று அப்பகுதியில் ரகசியமாக கண்காணிக்க தொடங்கினர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மேல் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த இர்பான் அகமத்(23), மோதின்பேட்டை பகுதியை சேர்ந்த சல்மான்(21) ஆகிய 2 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் அரை கிலோ கஞ்ச பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற 2 பேர் கைது கல்லூரி அருகில் appeared first on Dinakaran.

Related Stories: