திருவாரூரில் இருந்து ரயிலில் வந்த 2,000 டன் நெல் மூட்டைகள்

 

ஈரோடு, பிப். 19: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ரயில் மூலம் நேற்று ஈரோட்டிற்கு 2,000 டன் நெல் மூட்டைகள் வந்தது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது விநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், இரண்டாம் கட்டமாக 2,000 டன் நெல் மூட்டைகள் 51 பெட்டிகள் கொண்ட தனிசரக்கு ரயிலில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரயில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்து. பின்னர் நெல் மூட்டைகளை நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவிநியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post திருவாரூரில் இருந்து ரயிலில் வந்த 2,000 டன் நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Related Stories: