பாலாற்று படுகை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஏரிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

செங்கல்பட்டு, பிப். 19: செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய அலுவலகத்தில் பாலாற்று படுகை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தலைவராக தனசேகரன், செயலாளராக ஆனந்த், பொருளாளராக பசுபதி மற்றும் துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், ஐந்து செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீரமானங்கள் வருமாறு:

வில்லியம்பாக்கம் பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் அமைக்க வேண்டும். அனைத்து ஏரிகளை தூர்வாரி தண்ணீர் வருவாய், வடிகால்வாய்களை சீர்படுத்த வேண்டும். 100 நாள் வேலை செய்யும் பணியாளர்களை தேவைப்படும் நேரத்தில் விவசாயித்திற்கு பயன்படுத்த வேண்டும். விவசாயத்தை சேதப்படுத்தும் காட்டு பன்றி தொல்லை அதிகமாக இருப்பதால் பன்றிகளை ஒழிக்க வேண்டும்.

2021-2022 மற்றும் 2022-2023ம் ஆண்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு பெற்று தர வேண்டும். திம்மாவரம் பகுதியில் புதிய பாலாற்று தடுப்பணை அமைக்க வேண்டும். தேவனூர் பகுதியில் உள்ள பாலாற்று தடுப்பணை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘வேளாண்மைத்துறை இணை இயக்குநரிடம் இந்த 7 தீர்மானங்களும் வழங்கப்பட உள்ளது என கூறினர்.

The post பாலாற்று படுகை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஏரிகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும்: தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: