நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகள் பெயர் பதிவு

 

திருப்பூர், பிப். 18: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பெயர்களை பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. நான் முதல்வன் திட்டம் மாவட்ட நோடல் அதிகாரி மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கி பேசுகையில்,“நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு கல்லூரிகளில் சேருவதற்கு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்.

மேலும் கல்லூரியின் சிறப்பையும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் எளிதாக தெரிந்து கொள்ளலாம், கல்லூரி மாணவ, மாணவிகள் பதிவு செய்த பள்ளிகளுக்கு சென்று 12ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பாக வழிகாட்ட வேண்டும்’’ என்றார். மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு நான் முதல்வன் போர்டலில் பள்ளிகளை தேர்வு செய்து பதிவு செய்தனர்.

The post நான் முதல்வன் திட்டத்தில் மாணவ-மாணவிகள் பெயர் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: