தூத்துக்குடி வணிகவரித்துறை புதிய அலுவலக கட்டிடம் காணொலிகாட்சி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார்

தூத்துக்குடி, பிப்.18: தூத்துக்குடி வணிகவரித்துறை அலுவலகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக வணிகவரித்துறையின் சார்பில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள வணிகவரித்துறை அலுவலக வளாகத்தில் ரூ.4.48 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடத்தினை திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து கலெக்டர் லட்சுமிபதி குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை பார்வையிட்டார். இதில் துணை ஆணையர் அலுவலகம், உதவி ஆணையர்- 1 அலுவலகம், உதவி ஆணையர்- 2 அலுவலகம், உதவி ஆணையர் 3 அலுவலகம் மற்றும் உதவி இயக்குநர் செயலாக்க அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி வணிகவரித்துறை புதிய அலுவலக கட்டிடம் காணொலிகாட்சி வாயிலாக முதல்வர் திறந்துவைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: