லெமூர் கடற்கரையில் கடல் ஆமைகள் விழிப்புணர்வு தோல்பாவை கூத்து

நாகர்கோவில், பிப்.18: கணபதிபுரம் அருகேயுள்ள லெமூர் கடற்கரையில் கடல் ஆமைகள் விழிப்புணர்வு தோல்பாவை கூத்து நடைபெற்றது. கன்னியாகுமரி வனக் கோட்டம் குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் உத்தரவின்படி வேளிமலை வனச்சரக எல்லைக்குட்பட்ட கணபதிபுரம் லெமூர் கடற்கரையில் கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்த தோல்பாவைக்கூத்து நடைபெற்றது. தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியின் மூலம் கடல் ஆமைகள் பாதுகாப்பு, நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் மற்றும் கடல் பாதுகாப்பு போன்றவைகளின் அவசியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கடல் ஆமைகள் பாதுகாப்பினால் மக்களுக்கு கிடைக்கும் மறைமுக பயன்பாடுகளையும் எடுத்துரைக்கப்பட்டது. இதனை லெமூர் கடற்கரைக்கு சுற்றுலாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

The post லெமூர் கடற்கரையில் கடல் ஆமைகள் விழிப்புணர்வு தோல்பாவை கூத்து appeared first on Dinakaran.

Related Stories: