கன்னியாகுமரி: விளவங்கோடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ள விஜயதாரணி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாஜகவின் தேசியக் குழு கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் ஜெ.பி.நட்டா முன்னிலையில் விஜயதாரணி பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது.