ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கட்டிடங்கள் கட்டும் பணி: அமைச்சர் அன்பரசன் அடிக்கல்

ஸ்ரீ பெரும்புதூர்: தமிழக பொதுப்பணித்துறை சார்பில் ரூ.1.86 லட்சம் மதிப்பில் ஸ்ரீபெருமந்தூர் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.3.50 கோடி மதிப்பில் குன்றத்தூர் பெரியாநகர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 13 வகுப்பறைகள் மற்றும் ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டிடம், ரூ.2.64 கோடி மதிப்பில் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறைகள், 2 ஆய்வகம் மற்றும் ஆண்கள் கழிப்பறை கட்டப்பட உள்ளது.
இதுபோல் ரூ.1.95 கோடி மதிப்பில் மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறை மற்றும் ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டிடம், ரூ.1.44 கோடி மதிப்பில் திருமுடிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 வகுப்பறைகள், ஆய்வகம் மற்றும் ஆண்கள் பெண்கள் கழிப்பறை உள்ளிட்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கீவளூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புதிய கட்டிடம், ரூ.25.35 லட்சம் மதிப்பில் கிளாய் ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.10.19 லட்சம் மதிப்பில் தத்தனூர் ஊராட்சி சிஎஸ்ஐ தத்துனுர் பகுதியில் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.7.43 லட்சம் மதிப்பில் பால்நல்லூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி சமையலறை கட்டிடம், ரூ.18.79 லட்சம் மதிப்பில் எடையார்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைகள், ரூ.10.19 லட்சம் மதிப்பில் தண்டலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டிடம், ரூ.13.57 லட்சம் மதிப்பில் கீவளூர் அங்கன்வாடி மையம் கட்டிடம், ரூ.7.43 லட்சம் மதிப்பில் சந்தவேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை ஆகியோர் கலந்துகொண்டு, புதிதாக கட்டப்பட உள்ள அரசு கட்டிடங்களின் பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும், கட்டி முடிக்கபட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். விழாவில் மாவட்ட குழு தலைவர் மனோகரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, துணை தலைவர் மாலதி போஸ்கோ, மாவட்ட கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பாலா, ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் சாந்தி சதிஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கட்டிடங்கள் கட்டும் பணி: அமைச்சர் அன்பரசன் அடிக்கல் appeared first on Dinakaran.

Related Stories: